திருப்புவனம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
திருப்புவனம்,
திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், முதுவந்திடல், டி.பாப்பான்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேல ராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மேலவெள்ளுர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், மடப்புரம், பூவந்தி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.