மின்நிறுத்தம்
வடுவூர், எடமேலையூர், கோவில்வெண்ணி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.;
வடுவூர் மற்றும் எடமேலையூர், கோவில்வெண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், ஒளிமதி, சித்தமல்லி, ஆதனூர், கோவில்வெண்ணி. சோனாப்பேட்டை, செட்டிசத்திரம், வடுவூர் வடபாதி, தென்பாதி. சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு எடமேலையூர், எடஅன்னவாசல், எடகீழையூர், காரக்கோட்டை, கட்டக்குடி பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் பாலசவுந்தரம் தெரிவித்தார்.