கல்பாக்கம் அணுமின் நிலைய "கொதிகலன்" சரியானது; 180 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கம்
கல்பாக்கம் அணுமின் நிலைய கொதிகலனில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்ட நிலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.;
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது உலையில் கடந்த மே மாதம் 23-ம் தேதி, கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. அதை சரி செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது கொதிகலன் சரி செய்யப்பட்டு, 180 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜனவரியில் பழுதடைந்த முதல் உலை நான்கு ஆண்டுகள் ஆகியும், இன்னும் சரி செய்யவில்லை. இதனால் 220 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு கிடப்பது குறிப்பிடதக்கது.