மதுரையில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-03 19:48 GMT

பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இன்று மின்நிறுத்தம்

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் வைரவநத்தம் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால் சித்தாலங்குடி, ஆனைகுளம், வைரவநத்தம், வயலூர், சித்தன் குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

நாளை மின்தடை

மாகாளிப்பட்டி, தெப்பம், அனுப்பானடி துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே மாகாளிபட்டி துணை மின்நிலையத்தில் ஓட்டுக்காளவால், ராஜமான்நகர், அவினாஷ் மாடர்ன் ரைஸ்மில் வரை, தெப்பம் துணை மின்நிலையத்தில் கொண்டித்தொழு வடக்குத்தெரு, ஜிம்சந்து, வெங்கடபதி ஐயங்கார் கோவில் தெரு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சித்து பாலகிருஷ்ணன் சந்து, சுடலைமுத்துபிள்ளை சந்து. அனுப்பானடி துணை மின்நிலையத்தில் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியம் முழுவதும், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கேல் தெரு, தெய்வக்கன்னி தெரு, அய்யனார் கோவிலில் மார்க்கெட்,மண்எண்ணெய் பல்க் ஏரியா, மேல அனுப்பானடி மெயின் ரோடு, பாபுநகர், கணேஷ்நகர், வளனார் நகர், வேலன் தெரு, எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மதுரை மின்செயற்பொறியாளர் மோகன் தெரிவித்து உள்ளார்.

6-ந்ேததி

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் தொழிற்சாலை பீடர் மற்றும் ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் சோழவந்தான் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. எனவே ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, சொக்கலிங்கபுரம், கரட்டுப்பட்டி, மேல நாச்சிகுளம், கீழநாச்சிகுளம் லட்சுமிபுரம் பொம்மன்பட்டி, அம்மச்சியாபுரம், கருப்பட்டி, கணேசபுரம் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்