பராமரிப்பு பணி:இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;

Update: 2023-02-13 18:45 GMT

சிவகங்கை,

பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று, நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பராமரிப்பு பணி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாகோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சிபட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலு கோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம், ஏரியூர், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்தார்.

அரசனூர்

அரசனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்