தர்மபுரி:
தர்மபுரி கோட்டம் இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கலெக்டரேட், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.