தர்மபுரில்:
தர்மபுரி துணை மின் நிலையம், பைசுஅள்ளி துணை மின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரத்துக்கு உட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருப்பாட்சிபுரம், கோட்டை, நெசவாளர் நகர், அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோன்று ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய் நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பங்கரை, வெள்ளோலை, முக்கள்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.