சாக்கவயல் பகுதியில் மின்தடை
சாக்கவயல் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
காரைக்குடி,
சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்ரா வயல், ஊரவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பைக்குடி, லட்சுமி நகர், பொன் நகர் பெரியகோட்டை, விளாரிக்காடு, செங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவைல மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.