அய்யலூர், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் 16-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

அய்யலூர், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் 16-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-12-14 17:24 GMT

அய்யலூர் மற்றும் தாமரைப்பாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி, தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ரெட்டியார்சத்திரம் துணை மின்நிலையத்தில், 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், பொட்டிநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, கதிரையன்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, வெயிலடிச்சான் பட்டி, பங்காருபுரம், பழக்கனூத்து, நீலமலைக்கோட்டை, செம்மடைப்பட்டி, நரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று ரெட்டியார்சத்திரம் உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்