கொடைரோடு, ராமராஜபுரம் பகுதிகளில் 8-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

கொடைரோடு, ராமராஜபுரம் பகுதிகளில் 8-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-12-06 17:34 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் 8-ந்தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, கருப்பட்டி, இரும்பாடி நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 8-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதேபோல் அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் 8-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பகோட்டை, முருகத்தூரான்பட்டி, சாந்தலாபுரம், நிலக்கோட்டை தொழிற்பேட்டை, பொட்டிக்குளம், பள்ளப்பட்டி, மாவூர் அணை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்