கனமழை காரணமாக மயிலாடுதுறையில் 13 மணிநேரம் மின்தடை

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

Update: 2022-11-12 19:00 GMT

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டது.

வரலாறு காணாத மழை

வங்கக்கடலில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 3 நாட்கள்(11-ந் தேதி, 12-ந் தேதி, 13-ந் தேதி) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு 44 செ.மீ. மழை கொட்டியது.

13 மணிநேரம் மின்தடை

மயிலாடுதுறை நகர பகுதிகளில் கன மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் நேற்று காலை 10 மணி அளவில் மின் வினியோகம் செய்யப்பட்டது. 13 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மின் வினியோகம் செய்யப்படவில்லை. சீர்காழி நகரின் மைய பகுதிக்கு மதியம் 2 மணி அளவில் தான் மின்சாரம் வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்