பென்னாகரம், ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2022-10-25 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆர்.எஸ்.தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எலவடை, மருதிப்பட்டி, மேட்டுவலசை, எம்.வெள்ளாளப்பட்டி, எம்.வெளாம்பட்டி, சுண்டக்காப்பட்டி, ஆர்.எஸ்.தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூச்சனூர், எம்.பள்ளிப்பட்டி, கூத்தம்பட்டி, வீரனகுப்பம், குட்டப்பட்டி, பச்சினாம்பட்டி, கதிரம்பட்டி, சாமாண்டஅள்ளி, கே.ஈச்சம்பாடி பேப்பர் மில் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்