காரைக்குடியில் இன்று மின்தடை
காரைக்குடியில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
காரைக்குடி,
காரைக்குடி துணை மின் நிலையம் அண்ணா நகர்பீடரில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுதான மின்கம்பம் மாற்றும் பணி இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அண்ணாநகர், போலீஸ் காலனி, பாவேந்தர் சாலை, ஜீவா நகர், காமராஜர் நகர், செக்காலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
அதேபோல மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்திராஜான் பார்க், சுப்ரமணியபுரம் போஸ்ட் ஆபீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.ல் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.