தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்மபுரி கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ராமியணஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் ராமியணஅள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கருத்தான்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன்பட்டி, புது ரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஓபிளி நாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர் நாயக்கன்அள்ளி, ராணி மூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, சமத்துவபுரம் மெணசி, இருளப்பட்டி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் வரதராஜன், பூங்கொடி, ரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.