தாயமங்கலத்தில் அடிக்கடி மின்வெட்டு

தாயமங்கலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-09-23 18:45 GMT

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் ஊராட்சி மற்றும் சோமாசி, சக்கரபாணி, இடையவயல், கற்பூரகுடுக்கை ஆகிய ஐந்து கிராமங்களில் மின் பற்றாக்குறையால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தாயமங்கலத்தில் தெற்கு ரைஸ்மில் அருகே உள்ள மின் மாற்றியில் அடிக்கடி மின்னழுத்த குறைபாட்டால் இந்த கிராமங்களில் மின்தடை ஏற்படுகின்றது. இதை பிரித்து தாயமங்கலம் பள்ளிக்கூடம் அருகில் மின் மாற்றி அமைத்து தாயமங்கலம் ஆதி திராவிடர் காலனி, சோமாசி, சக்கரபாணி இடையவயல், கற்பூர குடுக்கை ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் பிரித்து கொடுத்தால் மின்தடை ஏற்படாமல் இருக்கும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக மின் வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், விரைந்து நடவடிக்கை எடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்