தச்சநல்லூர் பகுதியில் 17-ந் தேதி மின்தடை

தச்சநல்லூர் பகுதியில் 17-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-15 19:50 GMT

நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராமையன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் சூரிய மின் நிலையத்திற்கு 17-ந் தேதி (சனிக்கிழமை) மின் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் நெல்லை தச்சநல்லூர் பெரிய அம்மன் கோவிலில் இருந்து தச்சநல்லூர் சந்திமரிச்சம்மன் கோவில் வரை உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்