21 -ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
நெல்லை மாவட்டத்தில் 21 -ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 21 -ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துகுட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை, டவுன்
பாளையங்கோட்டை சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21 -ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை. மார்க்கெட் பகுதி, காமராஜ்நகர், சங்கர் காலனி, ராஜா குடியிருப்பு, மனகாவலன்பிள்ளை நகர், திருச்செந்தூர் சாலை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை பஸ் நிலையம், தெற்கு பஜார், கோட்டூர், படப்பகுறிச்சி, பொட்டல், திருவனந்தபுரம் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இதேபோன்று பழைய பேட்டை, டவுன் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் நெல்லை டவுன் மேல ரத வீதி மேற்கு பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகபட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரத வீதி போஸ் மார்க்கெட், ஏ.பி.மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மூலைக்கரைப்பட்டி
மூலைக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், கரந்தானேரி, மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21 -ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடன்குளம், சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூர், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பானான்குளம், அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.