மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

Update: 2023-07-22 20:00 GMT

தேனி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அந்தந்த பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். சிறப்பு முகாமில் பெயர் மாற்றம் தொடர்பான விண்ணப்பம் கொடுப்பவர்கள், விற்பனை மற்றும் வழிமுறையாக பெறப்பட்ட சொத்து எனில் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திர நகல், வீட்டு வரி ரசீது, தானமாக பெறப்பட்ட சொத்து எனில் பதிவு செய்யப்பட்ட தானப்பத்திரம் நகல், அதற்குரிய வீட்டு வரி ரசீது கொண்டு வர வேண்டும்.

இறந்தவர்கள் எனில் இறப்பு சான்று நகல், வாரிசு சான்று நகல், வீட்டு வரி ரசீது, ரூ.80 மதிப்பிலான பிணைய உறுதிப்பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். அத்துடன் பெயர் மாற்ற கட்டணமாக ரூ.726 செலுத்தி பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்