கடையம்,:
கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஆனைமுக வடிவம் கொண்ட மலையை சுற்றியுள்ள சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள பாதையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு சந்திராயன்- 3 வெற்றி பெற்றதை பாராட்டியும், ஆதித்யா-எல் 1 விண்கலம் வெற்றி பெறவும், இந்தியா விண்வெளியிலும், விவசாயத்திலும், மாணவர்கள் அறிவியலிலும், ஆளுமையிலும் சாதனை புரிந்து உலகம் போற்றும் இடத்திற்கு வரவேண்டியும், மழை வேண்டியும் பக்தர்கள் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.