கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.;

Update: 2023-09-28 19:03 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு கணக்க விநாயகர் கோவிலில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கோவிலில் தொடங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோவில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்