குமரியில் கொட்டும் மழை; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரியில் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-18 03:52 GMT

திருவட்டார்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மலை பகுதிகளான திற்பரப்பு கோதையாறு, சிற்றாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கல்லாறு, மணலோடை போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் 4000 கன அடி நீர் மறுகால் திறந்துவிடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவியின் அருகில் உள்ள கல்மண்டபம், சிறுவர்கள் விளையாடும் பூங்கா போன்ற பகுதிகளில் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது.

கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் என்று பொதுபணித்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுபணித்துறை மூலம் அனையில் நீர்மட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்