லாரி மோதி கோழி வியாபாரி பலி

லாரி மோதி கோழி வியாபாரி பலியானார்.

Update: 2023-08-19 18:48 GMT

 தரகம்பட்டி அருகே உள்ள கோட்டக்கரையாம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). கோழி வியாபாரியான இவர், நேற்று முன்தினம் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வாழ்வார்மங்களத்தில் இருந்து கோட்டக்கரையாம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். வாழ்வார்மங்களம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு லாரி வடிவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்