மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலிட்டு ஆர்ப்பாட்டம்
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மண்பானை வழங்கக்கோரி மணபாண்ட தொழிலாளர்கள் பொங்கலிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன்கார்டுதாரர்களுக்கு மண்பானை வழங்கக்கோரி மணபாண்ட தொழிலாளர்கள் பொங்கலிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாசிலை எதிரில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் எஸ்.எம்.முருகேசன் தலைமை தாங்கினார்.
மாநில இணை செயலாளர் சுந்தராஜ், மாவட்ட தலைவர் தேவேந்திரன், மாவட்ட செயலாளர் பலராமன், மாவட்ட பொருளாளர் வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயல் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது பொங்கல் பண்டிகையின் போது ரேஷன்கார்டுதாரர்களுக்கு மண்பானை, மண் அடுப்பு வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பொங்கலிட்டனர்
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், முன்னாள் ஓசூர் ஒன்றிய தலைவர் ராஜன்பாபு, மாநில துணை செயலாளர் கந்தசாமி, ராஜசேகர், முனிசந்திரப்பா,
ஜெயமூர்த்தி, ரகுநாதன், முனுசாமி, சேகர், நாராயணன், சிவக்குமார், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கரும்பு, மஞ்சளுடன், மூன்று மண் அடுப்பில், மண் பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.