ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கருகிய குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் பா. ஜனதா சார்பில் நடந்தது.
கோட்டூர்;
முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நெற் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. எனவே உடனடியாக காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு பெற்று தர வேண்டும்.மேலும் தண்ணீர் இல்லாமல் கருகிப்போன நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் பா. ஜனதா கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாநில பட்டியல் அணி துணை தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மேலிடபார்வையாளர் பேட்டை சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி, மாவட்ட செயலாளர் வினோத் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.