தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

தொட்டியம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-09-06 21:19 GMT

தொட்டியம்:

தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர் புனிதராணி. இவர் மீது துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் அன்புச்செல்வன் தேர்தலை நடத்த இருந்தார். ஆனால் ஒரே ஒரு கவுன்சிலர் மட்டுமே கலந்து கொண்டார். இதையடுத்து போதிய கவுன்சிலர்கள் வராத காரணத்தினால் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் நடத்த இருந்தார். அப்போது பேரூராட்சி தலைவர் சா.சரண்யாபிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் கரு.சண்முகம் மற்றும் 2 கவுன்சிலர்கள் மட்டுமே அங்கு வந்திருந்தனர். இதனால் போதிய கவுன்சிலர்கள் வராததால் தேதி குறிப்பிடாமல் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்