முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.