வாலாஜாபாத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
வாலாஜாபாத்தில் நாளை நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சீபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை( சனிக்கிழமை) நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.