அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு; காஞ்சீபுரம் பா.ம.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்ட பா.ம.க. நிர்வாகிகள் 2 பேரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2023-06-16 09:44 GMT

போலீஸ் நிலையங்களை...

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மறைந்த ஸ்ரீதரை போலீசார் தேடி வந்த கால கட்டத்தில், அவர் தனது குழுவில் உள்ள வேறு யார் மீதாவது கைவைத்தால் அடுத்த 15 நிமிடங்களில் காஞ்சீபுரத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அப்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில் மறைந்த ஸ்ரீதர் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்களான 2 பேர் சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் போலீஸ் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கும் அறிவிப்பை தங்களுடைய முகநூல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

கைது

இது குறித்து காஞ்சீபுரம் தாசில்தார் அளித்த புகாரின் பேரில் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட பா.ம.க. நிர்வாகிகளான உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 29), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் வெளியிட உதவிய கிதிரிப்பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரோகித் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசார் அவர்கள் இருவரையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்