எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள்

திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். சிலையின் கீழ் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.;

Update:2023-03-17 00:30 IST

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த சுவரொட்டிகளில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த சுவரொட்டிகள் அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலை கீழ் பகுதியில் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் சுவரொட்டியில், இவண் திண்டுக்கல் மாநகர், ஒன்றிய கழக தொண்டர்கள் என்று அச்சிடப்பட்டு இருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில், திண்டுக்கல் நகரில் எம்.ஜி.ஆர். சிலை பகுதியிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்