தபால் ஊழியர்கள் தேசிய கொடியுடன் ஊர்வலம்

Update: 2023-08-12 18:45 GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி இந்திய அஞ்சல் துறையின் சார்பாக நேற்று நாமக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தினை நாமக்கல் தலைமை இடத்து உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் அண்ணாமலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கிழக்கு உட்கோட்ட உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், மேற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் (பொறுப்பு) கேசவராஜ், தலைமை அஞ்சலக அதிகாரி நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம், டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, பஸ்நிலையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக மீண்டும் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது. இதில் கோட்ட அஞ்சலக ஊழியர்கள், தலைமை அஞ்சலக ஊழியர்கள், துணை அஞ்சலக ஊழியர்கள் மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள் தேசியக் கொடியுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்