சேலத்தில் தபால் அனுப்பும் போராட்டம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து சேலத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

Update: 2022-11-05 19:30 GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அ.தி.மு.க. ஆட்சியாளர்களிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து கூறினார். இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். இதை கண்டித்தும், சி.வி.சண்முகத்துக்கு நாவடக்கம் தேவை என்பதை கூறும் வகையில் அவரது உருவ படத்தில் வாயில் பிளாஸ்டிரி ஒட்டி தபால் அனுப்பும் போராட்டத்தை நேற்று சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சினர் ஈடுபட்டனர்.

மாநகர குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இருந்த தபால் பெட்டிக்குள் சி.வி.சண்முகம் படத்தின் வாயில் பிளாஸ்திரி ஒட்டி அதனை வருக்குள் வைத்து அவருடைய வீட்டின் முகவரிக்கு தபால் அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்