அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் சேவை நேர்காணல் 5-ந்தேதி நடக்கிறது

அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் சேவை நேர்காணல் 5-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-06-27 18:56 GMT

அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் சேவைக்கு வருகிற 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் நேர்காணல் கரூர் தலைமை அஞ்சலகத்தின் மாடியில் உள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சலக நேரடி காப்பீடு முகவர்களாக பணிபுரிய விரும்புவோர் 10-ம் வகுப்பு அல்லது சமமான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலையில்லாதவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவராக இருக்க வேண்டும். ஏதேனும் காப்பீடு ஆலோசகராக பணிபுரிந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதுபோல் அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள், சுயஉதவி குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு 18 வயதில் இருந்து 50 வயது வரையாகும். அதோடு காப்பீடு விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், வசிக்கும் பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் சுயவிவரம், 4 போட்டோ, வயது, கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என கரூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்