பொற்கொடி அம்மன் கோவில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு நிறைவு விழா

பொற்கொடி அம்மன் கோவில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2023-03-01 17:40 GMT

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேலங்காடு பொற்கொடி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி நேற்று காலை ஏரி கோவில் முன் பிரமாண்ட பந்தல் அமைத்து யாகங்கள் நடத்தி, பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் ஊர் பொற்கொடி அம்மன் கோவிலில் 6-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி யாகங்கள் வளர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொற்கொடி அம்மன் கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை மற்றும் வல்லண்டராமம், பனங்காடு, வேலங்காடு, அண்ணாச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்