காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Update: 2023-03-29 16:56 GMT


ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.அதன் காரணமாக ராகுல்காந்தியின் வயநாடு எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நேற்று இரவு திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ஜனார்த்தனன், முருகானந்தம், கிட்டுசாமி, கண்ணுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் ரவி, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உடுமலை பஸ் நிலையத்திலிருந்து முக்கிய வீதியில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசின் ஆட்சியில் ஜனநாயகத்தை தீப்பந்தம் ஏந்தி தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்