கோரிக்கை அட்டை அணிந்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

Update: 2023-09-20 17:12 GMT


கலைஞர் உரிமைத்தொகை திட்டத்துக்கான கூடுதல் பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சு வார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் (வியாழக்கிழமை) அதே போல கோரிக்கை அட்டைகளுடன் பணியாற்றி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர் மதன்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்