மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

Update: 2023-07-23 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உலக மக்கள்தொகை தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜீத், மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் தர்மர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி துணை இயக்குனர் விஜய்சந்திரன் வழிகாட்டுதலின்படி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்தியநேசன், சுகாதார ஆய்வாளர்கள் சாத்தன், எழில்மாறன், மற்றும் பள்ளி உதவிதலைமை ஆசிரியர் லதாராணி, எஸ்.எஸ்.கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் 200-க் கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்