பூணூல் அணியும் நிகழ்ச்சி
செங்கோட்டை அருகே பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
செங்கோட்டை:
செங்கோட்டை குண்டாற்று கரையில் அக்கசாலை விநாயகர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் வைத்து, விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது.
சமுதாய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். மகேஸ்வர சர்மா உள்பட பலர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் பாராயணத்துடன் பூணூல் மாற்றிக்கொண்டனர்.