பூங்குடையார் சாஸ்தா கோவில் வருசாபிஷேகம்
பத்தமடை அருகே பூங்குடையார் சாஸ்தா கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.;
சேரன்மாதேவி:
பத்தமடை அருகே உள்ள பூங்குடையாளர் குளம் கிராமத்தில் பூங்குடையார் சாஸ்தா கோவிலில் முதலாவது ஆண்டு வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், தனலட்சுமி பூஜையை தொடர்ந்து பூங்குடையார் சாஸ்தா, பார்வதி அம்மன், சுடலைமாட சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.