பூஞ்சோலையம்மன் கோவில் தேரோட்டம்

பூஞ்சோலையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-10 21:12 GMT

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம் நெய்குளம் ஊராட்சி நெடுங்கூர் கிராமத்தில் உள்ள பூஞ்சோலையம்மன், ஆலடியான் கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் முத்து பல்லக்கு, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது. கடந்த 8-ந் தேதி காலை அம்மன் வெட்டும் குதிரையில் வீதி உலா வந்தது. மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பூஞ்சோலையம்மனை தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. நெய்குளம், நெடுங்கூர், ரெட்டிமாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவில் கோவிலை அடைந்தது. தேரோட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்