குளத்தில் மண் திருட்டு; 3 பேர் மீது வழக்கு

களக்காடு அருகே குளத்தில் மண் திருடியது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-04 19:53 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் கீழகுளத்தில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மண் திருடப்படுவதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் சட்டவிரோதமாக குளத்தில் ஜே.சி.பி மூலம் மண் திருடிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ஜே.சி.பி எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வேலவன்குடியிருப்பை சேர்ந்த கோயில்பிச்சை மகன் முருகேசன் (வயது 26), மீனவன்குளத்தை சேர்ந்த அழகேசன், தெற்கு மீனவன்குளத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ஜாண் சாமுவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்