சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 3 நாட்கள் நடந்தது. விழாவில் 508 திருவிளக்கு பூஜை, சந்தன மாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை, தீர்த்தக்குடம் மற்றும் பால்குட ஊர்வலம், வில்லிசை, கரகாட்டம், சந்தன மாரியம்மன் சப்பர வீதிஉலா உள்ளிட்டவை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து பூக்குழி இறங்கினர்.