கெலமங்கலம் அருகே ராமநவமியையொட்டி32 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

Update: 2023-03-30 19:00 GMT

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி ஒசபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த சீதா சமேத ராமர் மற்றும் வீர ஆஞ்சநேயர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள 32 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலைக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் ரோஜா மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஆஞ்சநேயரின் சிலை மீது ரோஜா மலர்களை தூவி அபிஷேகம் செய்தனர். அப்போது கிராம மக்கள் ஏராளமானோர் வீர ஆஞ்சநேயர் மற்றும் ராமரை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ சீதா கல்யாணம் என்ற ஹரிகதா நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்