தைமாத கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2023-01-30 18:45 GMT

நாமக்கல்- மோகனூர் சாலை காந்திநகர் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று தைமாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வெள்ளிகவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்