கூடாரவல்லி உற்சவத்தையொட்டிபெண்கள் திருவிளக்கு பூஜை

Update: 2023-01-11 18:45 GMT

நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் அதிகாலை பக்தர்கள் பஜனையுடன் திருப்பாவை, திருவெம்பாவை பாடி சாமி தரிசனம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேந்தி மலைக்கோட்டையை வலம் வருவார்கள். மார்கழி மாதம் 27-ந் தேதி கூடாரவல்லி பூஜை நடைபெறும்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில் 52-ம் ஆண்டு கூடாரவல்லி பூஜை பல்லாண்டு படி விழா மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு அரங்கநாதர் கோவில் படிவாசலில் பெண்கள் வாழையில் திருவிளக்கு தீபம் ஏற்றி பூஜை செய்தனர். காலை 8.30 மணிக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இதில் பல்வேறு மலர்களால் கூடாரம் அமைத்து, அதில் அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அரங்கநாதரை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்