பாலக்கோட்டில் ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை

Update: 2023-03-14 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டில் உள்ள அல்லா கோவில் தெரு, ஹாஜி அப்துல் கரீம் தெருவில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 700 மீட்டர் தூரத்துக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் தஹசீனா, வார்டு கவுன்சிலர் ஆயிஷா மசி மற்றும் இதாயத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்