வளர்பிறை பஞ்சமியையொட்டி அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-02-24 18:45 GMT

தர்மபுரி:

வளர்பிறை பஞ்சமியையொட்டி காரிமங்கலத்தை அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடங்கள், மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ராகு காலத்தில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும் அஷ்ட வராஹி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்