தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை-ஏராளமான பெண்கள் பங்கேற்பு

Update: 2022-10-07 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரம் நடைபெற்றது. இந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக மறுபூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கும்ப பூஜை நடைபெற்றது. மேலும் கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவிளக்கிற்கு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் அம்மனுக்கு உபகார பூஜைகளும், ஊஞ்சல் உற்சவம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடந்தது.

மேலும் செய்திகள்