கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாளம்மன் கோவில் மண்டல பூஜை-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

Update: 2022-09-27 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாளம்மன் கோவில் 48-வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி காலை விக்னேஸ்வர பூஜை, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தன. பின்னர் மாங்கல்ய ஹோமம், நவக்கிரஹ ஹோமங்கள் நடந்தன.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 12 மணிக்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பழையபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்