சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,350-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,350-க்கு ஏலம்
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.997-க்கும், முல்லை ரூ.340-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.43-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.625-க்கும், கனகாம்பரம் ரூ.1,350-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும் ஏலம் போனது.