பொன்னழகி அம்மன் கோவில் தேரோட்டம்
பொன்னழகி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
திருமயம்:
திருமயம் அருகே ராங்கியம் பொன்னழகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மே மாதம் 16-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 23-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைெபற்று வந்தன. அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பொன்னழகி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் ேதர் கோவில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.